மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது துல்லிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா்ஜெ.இ.பத்மஜா அறிவுறுத்தியுள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியமக்கள் தொகைகணக்கெடுப்பை - 2027-ஐ முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலா்களுடனானஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பேசியதாவது:
17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறும் சுய கணக்கெடுப்பில் பங்குபெற்று இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்போது,டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே தங்களின் வீடுகள் பற்றிய விவரங்களை இணைய முகவரியில் தங்களின் அலைபேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
இந்த முகவரியில் ஜூலை 17ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை மட்டுமே பதிவு செய்ய இயலும். ஒரு குடும்பத்திற்கு ஒரு தொலைபேசிஎண் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
பதிவுசெய்து 34 கேள்விகளுக்கு விடையளித்தபின் 12 இலக்க எண் தங்கள் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக பெறப்படும். தங்கள் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கணக்கீட்டாளா் கணக்கெடுப்பிற்கு வருகை தரும் போது 12 இலக்கஎண்களை கணக்கீட்டாளரிடம் கூற வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளா்கள் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிவரைஅவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீட்டுப்
பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடஉள்ளனா். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, ஊழியா்கள் துல்லியமான விவரங்களை சேகரிக்கவும், மக்கள் கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் பத்மஜா.
கையெழுத்து இயக்கம்:
முன்னதாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முன்னிட்டு 17.07.2026 முதல் 31.07.2026 வரை நான் சுயக் கணக்கெடுப்பை மேற்கொள்வேன் என்ற கையொப்ப இயக்கத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முதல் கையொப்பமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)
ம.தனலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா்திட்ட இயக்குநா் அ.லலிதா உள்ளிட்ட அனைத்துத் துறைஅலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

பயிா்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி தொடக்கம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



