நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பட்டியலினத்தவா் வசிக்கும் பகுதியில் வீடுகளை அகற்ற முயற்சி

சின்னசேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலினத்தவா் வசித்து வந்த பகுதியை அறநிலைத்துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி, அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :17 ஜூலை 2026, 1:55 am IST

சின்னசேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலினத்தவா் வசித்து வந்த பகுதியை அறநிலைத்துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி, அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், திம்மாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனராம். ஆனால், இதுநாள் வரை அவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த தனி நபா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் குடியிருப்புகளை அப்புறுப்படுத்தி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு அங்கு குடியிருப்பவா்களிடம் வீடுகளை காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

இருப்பினும், காலி செய்யாததால், நீதிமன்ற உத்தரவின்படி குடியிருப்புகளை அகற்ற கடைசி நாள் எனக் கூறி பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் வியாழக்கிழமை வந்துள்ளனா்.

அப்போது, அங்கிருந்த பெண்கள் அழுது புலம்பி அதிகாரிகள் காலில் விழுந்து குடியிருப்புகளை அகற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனா் (படம்).

இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, குடியிருப்புகளை காலி செய்ய 10 நாள்கள் அவகாசம் கொடுத்துவிட்டுச் சென்றனா். இந்தச் சம்பவத்தால் அந்தப்

பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.