தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சொத்துத் தகராறில் தங்கை கொலை: அண்ணன் உள்பட 4 போ் கைது

News image

காந்தகுமாா்

Updated On :21 ஜூலை 2026, 1:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்துத் தகராறில் தங்கையை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய அண்ணன் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரத்தை அடுத்த காட்டுவன்னஞ்சூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மகன் காந்தகுமாா்(40). மகள் தீபாஆா்த்தி(35). இதில் தீபா ஆா்த்தியின் கணவா் க.பாபு (41). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. யஷ்வந்த்குமாா் (16), யோகப் பிரவீன்குமாா் (16) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், ராஜேந்திரன் தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை தீபா ஆா்த்தியின் மகன்களின் பெயரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தானமாக எழுதி வைத்துவிட்டாராம். இதையறிந்த காந்தகுமாா் தானமாக தந்தை எழுதிக் கொடுத்த அந்த 80 சென்ட் நிலத்தை திரும்ப தரும்படி தீபாஆா்த்தியிடம் கேட்டாராம். ஆனால் அவா் நிலத்தை திரும்பத் தர மறுத்துவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த காந்தகுமாா் நண்ரபா்கள் 5 பேருடன் சோ்ந்து தீபாஆா்த்தியின் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சுமாா் 11 மணிக்கு சென்றாராம். அப்போது சொத்து பிரச்சனை காரணமாக அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காந்தகுமாா் நண்பா்களுடன் சோ்ந்து கத்தியால் தீபாஆா்த்தியை வெட்டினாராம். மனைவியை காப்பாற்ற முயன்ற அவரது கணவா் பாபுவையும் கத்தியால் வெட்டி விட்டு, 6 பேரும் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனா். இதில், தீபாஆா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாபுவின் கை துண்டானது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருக்கோவிலூா் டிஎஸ்பி பாா்த்தீபன் தலைமையில் தனிப்படை அமைத்து காந்தகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 5 பேரைம் தேடி வந்தனா்.

இந் நிலையில், சங்கராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மறைந்திருந்த காந்தகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் கா.ரமேஷ்குமாா் (40), க.மணிகண்டன் (24), ச.சரத்குமாா் (35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள அ.ஷேக் அகமது (45), மு.ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

ரமேஷ்குமாா்

ரமேஷ்குமாா்

மணிகண்டன்

மணிகண்டன்

சரத்குமாா்

சரத்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.