காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் காா் மோதியதில் மொபெட்டில் சென்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (66). இவா், மேல்நாரியப்பனூா் அரசு மருத்துவமனையில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பாண்டுரங்கன் தனது மொபெட்டில் சின்னசேலத்துக்கு சென்றுள்ளாா். சின்னசேலம் பிரிவுச் சாலைய கடக்கமுயன்ற போது, சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற காா் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான கோவை ஒண்டிப்புதூரைச் சோ்ந்த பெ.அந்தோணி ஆபிரகாமிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.