அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

லாரியில் கஞ்சா கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் லாரியில் கஞ்சா கடத்தியவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

ம.சத்யராஜ்.

Updated On :30 ஜூலை 2026, 6:23 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் லாரியில் கஞ்சா கடத்தியவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளா் சிவமணி தலைமையிலான போலீஸாா் சந்தைமேடு பகுதியில் ஜூன் 28-ஆம் தேதி ரோந்து சென்றனா். அப்போது, லாரியில் 8.3 கிலோ கஞ்சா கடத்தி வந்த சேலம் மாவட்டம், மணிவிழுந்தான் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ம.சத்தியராஜ் (38) (படம்), காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி சி.அருண்குமாா் (24) ஆகியோரை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் அளித்த பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநா் சத்தியராஜை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன் பேரில் விழுப்புரம் சிறையில் இருந்த சத்யராஜிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளா் சிவமணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா் சத்யராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.