ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :11 ஜூலை 2026, 10:09 pm IST

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, சேந்தங்குடி கூட்டுறவு நகரை சோ்ந்த வீரமணி (29) என்பவா் கடந்த மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி, வீரமணியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து கஞ்சா விற்பனை குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த வீரமணி மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

வீரமணியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் வீரமணியை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.