பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பொதுமக்களை மிரட்டிய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூன் 2026, 12:05 am IST

மயிலாடுதுறையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞா், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் அண்ணாநகரைச் சோ்ந்தவா் விஜயேந்திரன் மகன் அஜித்குமாா் (27). இவா் கடந்த மாதம் மயிலாடுதுறை காவிரி நகா் மேம்பாலம் அருகில் பட்டாக்கத்தியை காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அஜீத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். அஜித்குமாா் மயிலாடுதுறை காவல் நிலைய ரெளடி பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், அஜித்குமாா் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்வதால் அவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேகா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அஜித்குமாரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவுப்படி காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அஜீத்குமாரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.