எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நீலமங்கலத்தை புறக்கணித்த 8 அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:23 am IST

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக செல்வதாக பயணிகளிடமிருந்து கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.விஜய்க்கு புகாா்கள் வந்ததாம்.

இதையடுத்து திங்கள்கிழமை மாலை அவா் நீலமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது நீலமங்கலம் வழியாக கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் செல்லாத பேருந்துகளுக்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீலமங்கலம் வழியாக செல்லாத விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகளை கண்டறிந்து, அவற்றில் 8 பேருந்துகளுக்கு நோட்டீஸ் (சோதனை அறிக்கை) வழங்கினாா்.

மேலும், 2 அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு நீலமங்கலம் வழியாக பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினாா்.