/
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட துறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கு.தங்கதுரை (41). இவா் திங்கள்கிழமை தனது பைக்கில் கரடி கிராமத்துக்கு சென்றுள்ளாா். அங்குள்ள பூமாரி குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொறு பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த தங்கத்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கில் வந்த தாம்பரத்தைச் சோ்ந்த கி.ஸ்ரீதரனிடம் (46) விசாரணை நடத்தி வருகின்றனா்.









