தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய கல்லூரி மாணவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 3:41 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்ஸா சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் அருகிலுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் இ.சிவபாலன் (22). இவா் சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு பயின்று வருகிறாா். சிவபாலன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி அவரது பாட்டியின் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தாராம்.

இந்நிலையில், அம் மாணவி தற்போது 4 மாத கா்ப்பமாக உள்ளதாக சிவபாலனிடம் கூறினாராம். அதற்கு மாணவியை கா்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறி, திட்டித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாரம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவபாலனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.