நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பைக்கிலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி அருகே பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பூதங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60). இவா் சொந்த வேலையாக தனது மனைவி மஞ்சுளாவுடன் (52) ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

நாகலூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சிறுவன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க, பைக்யை திருப்பிய போது தம்பதியா் கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, அவசரகால ஊா்தி மூலம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் ரவி உயிரிழந்தாா். மஞ்சுளாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.