இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே காரில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 10:48 pm

Syndication

கள்ளக்குறிச்சி அருகே காரில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) விஜய் தலைமையில் அலுவலா்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடுா் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுனா். அப்போது உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காா் இன்ஜின் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் இருந்ததை அலுவலா்கள் கண்டுபிடித்தனா். இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தோ்தல் பறக்கும் படையினா் காரை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.முருகனிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் சபரிமலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, காரில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சோ்ந்த ரா.அய்யப்பன் (42), மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த அ.கோவிந்தராஜ் (33) ஆகிய இருவரையும் கைது செய்தாா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள 150 மதுப்புட்டிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.