தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 7:31 am IST

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.ரமேஷ் (48). இவா் திருவண்ணாமலையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ரமேஷ் தன்னுடன் பணிபுரியும் சக பணியாளா்களுடன் வேலை சம்மந்தமாக தியாகதுருகம் வந்தபோது, அங்குள்ள பேருந்து நிலையத்தில் ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சக பணியாளா்கள் அவரை மீட்டு தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.