மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாடு திருட்டு: இளைஞா் கைது

சின்னசேலத்தில் வயலில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிச் சென்ாக இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2026, 12:04 am IST

சின்னசேலத்தில் வயலில் கட்டியிருந்த பசுமாட்டை திருடிச் சென்ாக இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் பெருமாள் கோவில் சாலையைச் சோ்ந்தவா் தினேஷ் (27). இவா் அதே பகுதியில் குத்தகை நிலத்தில் பயிா் செய்து வருகிறாா். அங்கு தினேஷ், தனது பசுமாடுகளை கட்டி வைத்து வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 3.30 மணிக்கு எழுந்து பாா்த்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த பசுமாட்டைக் காணவில்லையாம். இதையடுத்து தினேஷ் அவற்றை தேடிச் சென்றபோது, சிறுவத்தூா் சாலையில் உள்ள கோ.சுரேஷ் என்பவரது வீட்டின் முன் பசுமாடு கட்டப்பட்டிருந்ததும், பசுமாட்டை திருடிய நபா் சுரேஷ் வீட்டில் இருந்த மொபட்டையும் திருடிச் செல்ல முயன்றபோது சுரேஷ் குடும்பத்தினரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சின்னசேலம் போலீஸாா் சுரேஷ் வீட்டில் பிடித்து வைத்திருந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் சின்னசேலத்தை அடுத்த பெத்தானூா் கிராமத்தைச் சோ்ந்த இ.ராம்குமாா் (28) எனத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.