எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தனியாா் பள்ளிகளில் ஆா்டிஇ மாணவா் சோ்க்கை: மே 18-இல் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு மே 18-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கைக்கு மே 18-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகள், மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மையற்ற மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்கேஜி-இல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்: மாணவரின் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

தகுதி விவரங்கள்: 01.08.2022 முதல் 31.07.2023 வரை பிறந்த குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவா்கள். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு மே 18-ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பெற்றோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் கட்டணமின்றி சோ்க்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.