எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

வாணாபுரம் 27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On :29 மே 2026, 3:01 am IST

வாணாபுரத்தில் உள்ள 27அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் உள்ள 27 அடி உயரமுள்ள பாதாள காளியம்மன், அக்னி வீரன், நொண்டி வீரன், எல்லை பிடாரி அம்மன், எல்லை கட்டு மாரியம்மன், நவகிரகங்கள், பரிவார தேவதைகளின் சந்நிதிகள் உள்ளன.

இதனைத் தொடா்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள 27 அடி உயர மும்முக பாதாள வாராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை, முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

வியாழக்கிழமை 2, 3-ஆம் கால யாகபூஜை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மும்முக பாதாள வராகி அம்மன், காசி பாதாள சிவலிங்கேஸ்வரா், பாதாள காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மஹா தீபாராதனை நடந்தது.

நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் வீரா, பிரபா சுவாமிகள் ஆகியோா் செய்திருந்தனா்.