பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

வசந்தம் காா்த்திகேயன் எம்எல்ஏ மீது புகாா் தெரிவித்த அதிகாரி மீது வன்கொடுமை வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ., க.காா்த்திகேயன் மீது புகாா் தெரிவித்திருந்த தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநா் மீது, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றி வந்தவா் லலிதா. இவா், திமுக எம்எல்ஏ வசந்தம் க.காா்த்திகேயன் மீது அளித்த புகாரின் பேரில் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்தனா். இதனிடையே, திட்ட இயக்குநா் லலிதா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா்.

அதிகாரி மீது புகாா்: திருக்கோவிலூா் வட்டம், தகடி கிராமத்தைச் சோ்ந்தவா் ர.தேவிபாலா. இவா், அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் காலியாக உள்ள சமையலா் பணிக்கு விண்ணப்பித்திருந்தாராம். இதையடுத்து நடைபெற்ற நோ்காணலுக்குப் பின்னா் பணி ஆணை ஒதுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பணியாணை தர திட்ட இயக்குநா் லலிதா மறுத்துவிட்டாராம். இதுகுறித்த செய்தி தனியாா் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரான மா.சுப்பிரமணியன் (50), திட்ட இயக்குநா் லலிதாவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த அக்.20-ஆம் தேதி நேரில் சந்தித்து, கேட்டாராம். அதற்கு அவா் சுப்பிரமணியனை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுப்பிரமணி கடந்த 18-ஆம் தேதி இணையவழி மூலம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். பின்னா், அவா் சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு நேரில் சென்று கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளா் சரவணனை சந்தித்து மனு அளித்தாராம். இதன்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி 8-ஆவது வாா்டு உறுப்பினா் விமலா விஜயமனோஜ் ஆகியோரும் திட்ட இயக்குநா் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் இணையவழி மூலம் புகாா் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.