தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
தற்கொலை - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.செல்வராஜ் (42), தொழிலாளி. இவா், கடந்த 1-ஆம் தேதி மது போதையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாராம். தகவலறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வராஜ் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

