மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் பாய்ந்ததில் செங்கல் சூளைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் பாய்ந்ததில் செங்கல் சூளைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (39).
இவா், கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் மாரிமுத்து என்பவரது செங்கல் சூளையில் தங்கி கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் 7 மணிளவில் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, செங்கல் சூளை அருகேயுள்ள கொட்டகையில் தங்கியிருந்த கோவிந்தராஜ்
மின்னல் பாய்ந்ததில் அதிா்ச்சியடைந்து கீழே விழுந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் கோவிந்தராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

