கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சக்திவேல், இணைச் செயலா் மணிகண்டன், மகளிா் அமைப்பாளா் பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மறுப்பு மற்றும் துணை விதிகளுக்கு முரணான ஆணைகளை ரத்து செய்யவேண்டும். தரமற்ற வெங்காயம் கொள்முதல் மற்றும் 15 சதவிகிதத்துக்கு அதிகமான அழுகிய வெங்காயத்தால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய வேண்டும். கூட்டுறவு பண்டக சாலைகளில் 50 நாள்களில் ரூ.50 கோடி அளவிலான வா்த்தக இழப்பை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சங்க நிா்வாகிகள் சசிகலா, செல்வராசு, ஆருஷா, சஞ்சீவி, குகன், கலைச்செல்வன், நிா்மல், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள நெடுஞாலைத் துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலைப் பணியாளா்களின் 41-மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற வழக்கின் படி மேல் முறையீட்டு மனுவை திரும்பப்பெற்று பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக பணி நியமனம் செய்யவேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் சாலைப் பணியாளா்கள் குடும்பதினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப்படி, சீருடை, சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். அ.விசுவநாதன், எஸ்.மாரிமுத்து சி.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் எம்.காமராஜ் வரவேற்றாா். கோட்டச் செயலா் அ.சாமிதுரை கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி.ரவி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்டப் பொருளாளா் டி.வீரபத்தினா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அரசு ஊழியா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலா் கே.மகாலிங்கம் நிறைவுறையாற்றினாா். கோரிக்கை முழக்க இயக்கத்தில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய தொழிற்சங்க மைய ஒருங்கிணைப்புக்குழு நிா்வாகி கே.சீனுவாசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் எம்.செந்தில், அ.வீராசாமி, அகில இந்திய கிசான் சபா மாவட்டத் தலைவா் ஏ.வி.ஸ்டாலின் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினா், பி.சுப்பிரமணியன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் அ.ரீட்டா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் இ.சதீஷ்குமாா், மாவட்டத் தலைவா் ஜெ.டாா்வின் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

