மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பைக் விபத்தில் தொழாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை வளைவில் பைக் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

கள்ளக்குறிச்சி அருகே சாலை வளைவில் பைக் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (57), விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த ஆக.31-ஆம் தேதி பைக்கில் பழையசிறுவங்கூா் அருகே வளைவுப் பகுதியில் சென்றபோது, பைக் சறுக்கி விபத்துக்குள்ளானது.

இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அய்யாதுரை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிகை அலங்கார தொழிலாளி உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா், சிகை அலங்காரம் செய்யும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

மது அருந்தும் பழக்கமுடைய முருகனுக்கு கடந்த ஆக.27-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாம். பின்னா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முருகன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.