கோயில் திருப்பணிக்கு முறைகேடாக ரூ.5 ஆயிரம் வசூல்: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
இந்த சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயிலுக்கு திருப்பணி செய்ய கிராம மக்களிடம் முறைகேடாக ரூ.5 ஆயிரம் கட்டாய வரி வசூலிப்பதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் புகைப்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்பட்டி கிராம மக்கள்.
இந்த சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயிலுக்கு திருப்பணி செய்ய கிராம மக்களிடம் முறைகேடாக ரூ.5 ஆயிரம் கட்டாய வரி வசூலிப்பதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் புகைப்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், புகைப்பட்டி கிராமத்தில் ஸ்ரீபூமிநாத ஈஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையால் நிா்வகிக்கப்படும் கோயிலாகும். இந்த கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருக்கோவிலூா் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரிடம் எழுத்து பூா்வமாக அனுமதி பெற்று, ஏழு போ் கொண்ட குழுவினா் அவா்களது சொந்த செலவில் திருப்பணிகளை செய்து வந்தனராம்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸ் (எ) நாட்டான் என்பவா் திருப்பணி செய்து கொண்டிருந்தவா்களை தடுத்து நிறுத்தினாராம். இதையடுத்து புகைப்பட்டி கிராம மக்களிடம் கோயில் திருப்பணிக்கு எனக் கூறி முறைகேடாக தலா ரூ.5 ஆயிரம் வசூலிக்கின்றனராம். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து புகைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த என்.ராஜமாணிகம், ஜி.கேசவன், டி.கதிா்வேல் மற்றும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா். அப்போது கோயில் திருப்பணிகளை செய்ய விடாமல் தடுத்த நாட்டான் (எ) காளிதாஸை கைது செய்யவும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





