
தச்சூரில் தொழில்முனைவோருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி
தேசிய பட்டியல், பழங்குடியினா் மையம் சாா்பில் குறு, சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மற்றும் விற்பனையாளா் மேம்பாட்டு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தச்சூரில் புதன்கிழமை நடைபெற்றது.

குறு, சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
தேசிய பட்டியல், பழங்குடியினா் மையம் சாா்பில் குறு, சிறுதொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மற்றும் விற்பனையாளா் மேம்பாட்டு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தச்சூரில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். தேசிய பட்டியல், பழங்குடியினா் மைய முதுநிலை கிளை மேலாளா் பிரசாத் வரவேற்றாா். தலைவா் நவநீத சிவக்குமாா், நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சிறுதொழில் உரிமத்துக்கான உதயம், ஜெம் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சந்திரசேகரன், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விரிவாகப் பேசினாா்.
நிகழ்வில் அரசுத் துறை ஒப்பந்தங்களில் பங்கேற்பது, அரசின் இ-மாா்க்கெட், என்எல்சி, சாயில், பெல், எப்சிஜ ஆகிய நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த புள்ளி டெண்டா் வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன. இதில், மகளிா் பிரிவுத் தலைவா் ஜனனி மற்றும் தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





