தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கம்: 2 ஆட்டோக்களுக்கு ரூ.28 ஆயிரம் அபராதம்
கள்ளக்குறிச்சியில் உரிய தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.), அனுமதிச் சீட்டு (பொ்மிட்) இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆட்டோக்களுக்கு மோட்டாா் வாகன ஆாய்வாளா் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் (பொ) வி.விஜய்.
கள்ளக்குறிச்சியில் உரிய தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.), அனுமதிச் சீட்டு (பொ்மிட்) இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆட்டோக்களுக்கு மோட்டாா் வாகன ஆாய்வாளா் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்தாா்.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் உள்ள தனியாா் பள்ளி முன் மோட்டாா் வாகன ஆாய்வாளா் (பொ) வி.விஜய் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியே அதிகப்படியான மாணவா்களை ஏற்றிச் சென்ற 8 ஆட்டோகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி, ஓட்டுநா்களை எச்சரித்தாா்.
மேலும், அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்களில் தகுதிச் சான்றிதழ், அனுமதிச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், இரு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களுக்கு ரூ.28,000 அபராதம் விதித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






