கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கார்னிவல் விழா நடத்த மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

காரைக்கால், ஜன. 8: திருமலைராஜனாறு பாலம் பழுதாகி காரைக்கால் வணிகர்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் கார்னிவல் விழா நிகழ்த்த வேண்டியதன் அவசியம் என்ன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காரைக்கால், ஜன. 8: திருமலைராஜனாறு பாலம் பழுதாகி காரைக்கால் வணிகர்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் கார்னிவல் விழா நிகழ்த்த வேண்டியதன் அவசியம் என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் காரைக்காலில் கார்னிவல் விழா வரும் 15 முதல் 4 நாள் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இதை கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டச் செயலர் அ.வின்சென்ட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

கடந்த 2004-05ஆம் ஆண்டு புதுவை அரசின் சுற்றுலாத் துறையும், நகை வியாபாரிகளும் இணைந்து நடத்திய தங்கத் திருவிழாவில் பல முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எதிர்காலத்தில் இதுபோன்ற விழா நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. தற்போது மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் காரைக்காலில் வணிகத்தை பெருக்கும் நோக்கில் கார்னிவல் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடக்கிறது.

இதற்காக அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. காரைக்காலில் பெருநகரங்களை இணைக்கும் வகையில் உள்ள திருமலைராஜனாறு பாலம் பழுதாகி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரைக்காலில் உள்ள வியாபாரிகளுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், முதியோர் என எல்லா நிலையில் இருப்போரும் போக்குவரத்து பாதிப்பால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த சூழலில் திரைப்பட குழுவினர் உள்ளிட்டோர் அழைத்து வந்து கார்னிவல் நடத்த வேண்டுமா என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்புகிறது. இதற்காக செலவிடும் தொகை பாலம் பழுதானதை சீரமைக்க ஒதுக்குவதோடு, கூடுதலாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர்செய்ய பயன்படுத்தலாம்.

இல்லையெனில் காரைக்காலில் நிதியின்மையால் பல்வேறு கட்டுமானங்கள்,  வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை சீர்செய்யலாம். ஆனால் புதுவை அரசோ, மத்திய அரசு தரும் நிதியை வீணாக செலவிடுவதிலும், இல்லையெனில் எந்த பயன்பாட்டுக்கும் செலவிடாமல் நிதியை திருப்பி அனுப்புவதில் கவனம் செலுத்துகிறது. புதுவை அரசின் இச்செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கார்னிவல் விழா நடத்துவதை நிறுத்தாவிட்டால் விழா தொடங்கும் நாளில் புதுவை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.