இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் 8,50,515 வாக்காளர்கள் உள்ளனர்.
Updated on
1 min read

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் 8,50,515 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடையே, வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான சு.பா.தீபக்குமார் வெளியிட்டார்.

2013 ஜன.1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 2012 அக்.16ம் தேதி முதல்

2013 ஜன.5-ம் தேதி வரை நடந்தது.

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4,08,665 ஆண் வாக்காளர்கள், 4,41,841 பெண் வாக்காளர்கள், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 8,50,515 வாக்காளர்கள் உள்ளனர்.

பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய ஏதுவாக, புதிய இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஜன.5ம் தேதி முதல் 11ம் தேதி வரை காலை 8.45 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று சு.பா.தீபக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com