தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:09 pm

தினமணி

பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதன் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பேரவைத் தலைவர் கோ.செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தெ.தியாகு, செயர் சிவமுத்துக்குமாரசாமி, பொருளாளர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே புதுச்சேரி அரசு, தமிழக அரசைப் போல உறுதியான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து, மேற்படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.