தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

1.37 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5.67 கோடி: முதல்வர் துவக்கி வைத்தார்

மத்திய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1.37 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் உணவுப் பொருள்களுக்கான மானியத் தொகை ரூ.5.67 கோடி செலுத்தும் திட்டத்தை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

Published On :

மத்திய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1.37 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் உணவுப் பொருள்களுக்கான மானியத் தொகை ரூ.5.67 கோடி செலுத்தும் திட்டத்தை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய உணவு பொருள்களுக்கான மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு இம்மாதம் முதல் அமல்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளாக அனைத்து சிகப்பு நிற குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் கண்டறியப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்ட ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் திரட்டப்பட்டு, கணினியில் ஏற்றப்பட்டது.

அவ்வாறு ஆதார் எண் கிடைக்கப்பெற்ற 1,36,775 சிகப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் மானியத் தொகை, அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்காக இம்மாதத்திற்கான மானியத் தொகையான ரூ.5.67 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி, 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பயனாளிகளாக கருதப்படுவர். இதன்படி சிகப்பு நிற குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு பயனாளிக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசிக்கான மானியத் தொகையாக ரூ.115.60 வழங்கப்படும்.

மேலும் அஅவ அட்டைதாரர்களுக்கு மொத்தமாக 35 கிலோ அரிசிக்கான மானியத் தொகையாக ரூ.809.30 வழங்கப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்டு ஒவ்வொரு அட்டைக்கான மானியத் தொகையும், அவ்வட்டையில் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்ட ஆதார் எண் கொண்டவரின் வங்கிக் கணக்கில் இம்மாதம் முதல் செலுத்தப்படுகிறது.

வங்கியோடு இணைக்கப்பட்ட ஆதார் எண் கிடைக்கப்பெறாத மீதமுள்ள சிகப்பு அட்டைதாரர்களின் தகவல் திரட்டப்பட்டு அடுத்த மாதம் அவர்களுக்கு பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கிலோ ரூ.3 விலையில் மத்திய அரசின் அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானியத் தொகை வழங்கப்பட்ட பயனாளிகளின் விவரங்கள் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் மானியத்தொகையை நேரடியாக செலுத்தும் திட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார். குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மு.பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.