மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை புதுச்சேரி சமூக நலத் துறை அமைச்சர் பி.ராஜவேலு திறந்து வைத்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை புதுச்சேரி சமூக நலத் துறை அமைச்சர் பி.ராஜவேலு திறந்து வைத்தார்.

மத்திய அரசின் திட்ட நிதியுதவி ரூ. 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.ராஜவேலு கலந்து கொண்டு கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன், கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், பயிற்சி நிலைய முதல்வர் ஜெகதீஸ்சந்திரன், ஆர்.எம்.பைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் துறை மூலம் நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,396 தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான இந்த நிலையத்தின் மேம்பாட்டுக்காக ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணி செய்யப்பட்டதாகவும், தொழிற்பயிற்சி பெறும் மாணவிகளுக்குத் தேவையான கணிப்பொறிகள், நவீன தையல் இயந்திரங்கள் ரூ.8 லட்சத்தில் அண்மையில் வாங்கப்பட்டு பயிற்சி தரபட்டு வருவதாக நிலையத்தார் தெரிவித்தனர்.

இரவு 10 மணிக்கு நடந்த விழா: தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைப்பார் எனவும், விழா நேரம் புதன்கிழமை பிற்பகல் 3 மணி எனவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வர் காரைக்கால் வருவது குறித்து தகவல் மாலை 5 மணி வரை உறுதியாகவில்லை.

இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாமா? எனவும் தொழிலாளர் துறை உயரதிகாரிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்த நலத் துறை பி.ராஜவேலு காரைக்கால் வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

இரவு 9.30 மணிக்கு காரைக்கால் வந்த அவர், திருமலைராயன்பட்டினத்துக்கு 10 மணியளவில் சென்று கட்டடத்தை திறந்து வைத்தார்.

முதல்வர் தம்மை மாலை 6 மணியளவில் அழைத்து, காரைக்கால் செல்லும்படி கோரியதாகவும், தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதால் தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும், தாமதத்துக்கான வருத்தத்தை அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.