மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

மார்ச் 6-இல் திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. உலகப் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. உலகப் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இக்கோயில் சார்பில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 11-ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வரும் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வழக்கமாக கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றுவந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நிகழாண்டு  வரிசை வளாகத்தில் (கியூ காம்ப்ளக்ஸ்) உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முதல்நாள் நிகழ்ச்சி 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. இரவு 8.30 மணியளவில் பத்மாசுப்ரமணியம் குழுவினர் பங்கேற்கும் மோகினியாட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து ஜப்பான், கனடா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரத நாட்டியமாடி புகழ்பெற்றக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடவுள்ளனர்.

ஏறக்குறைய ஆயிரம் கலைஞர்கள் இந்த 5 நாள் நாட்டியாஞ்சலியில் பங்கேற்பர். காரைக்கால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறந்து விளங்கும் நாட்டியக் கலைஞர்களும் இதில் பங்கேற்கின்றனர். தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள் இதைக் காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும் எனக் கோயில் நிர்வாகத்தினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.