ஊதியம், சலுகை வழங்கக் கோரி புதுவை பேரவைச் செயலரிடம் நியமன எம்எல்ஏக்கள் மனு
புதுவை சட்டப்பேரவையில் தங்களுக்கு இருக்கை வசதி, ஊதியம், சலுகைகள் ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரவைச் செயலரிடம், நியமன எம்எல்ஏ.க்கள் 3 பேர் மனு கொடுத்தனர்.


புதுவை சட்டப்பேரவையில் தங்களுக்கு இருக்கை வசதி, ஊதியம், சலுகைகள் ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரவைச் செயலரிடம், நியமன எம்எல்ஏ.க்கள் 3 பேர் மனு கொடுத்தனர்.
புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்எல்ஏவாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது.
மாநில அரசின் பரிந்துரையின்றி நியமிக்கப்பட்டஇவர்களுக்கு பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவில்லை. இதனால், இவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நியமன எம்எல்ஏக்கள் மூவரும் தங்களுக்கு அலுவலகம், பேரவையில்
இருக்கை வசதி, ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கோரி பேரவைத் தலைவர், சட்டப்பேரவைச் செயலர்
ஆகியோரிடம் மனு அளித்தனர்.
ஆனால், அதை ஏற்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, மாநில அரசின் பரிந்துரையின்றி, மத்திய அரசு நேரடியாக எம்எல்ஏக்களை நியமனம்
செய்தது தவறு என முறையிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ஆளுநரின் பரிந்துரைப்படி, புதுச்சேரி அரசின் சார்புச் செயலர் கண்ணன் நியமன எம்எல்ஏக்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் இதரச் சலுகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்டப்பேரவைச் செயலருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரை சந்தித்து சார்புச் செயலர் கண்ணன் உத்தரவுப்படி தங்களுக்கு ஊதியம், சலுகைகள் வழங்கக் கோரி கடிதம் கொடுத்தனர்.
அதன் பின்னர், நியமன எம்எல்ஏவும் பாஜக தலைவருமான சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுவையில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறது.
யூனியன் பிரதேச சட்டத்தின்படி குடியரசுத் தலைவருக்கே இறுதி அதிகாரம் உள்ளது.
எனவே, எங்களை நியமன எம்எல்ஏவாக ஏற்று பேரவையில் இருக்கை வசதி, பேரவை வளாகத்தில் அலுவலகம், ஊதியம், சலுகைகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...