ஊர்க்காவல் படை வீரர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
புதுச்சேரி அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


புதுச்சேரி அருகே பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி பாகூர் மணமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோ(32), ஊர்க்காவல் படை வீரர். இவர் செவ்வாய்க்கிழமை வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தில் மணவெளி-ஒத்தவாடை வீதி சந்திப்பில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஒரு வழிப்பாதையில் வந்த ஆம்னி காரை மனோ மறித்தார். காரில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரையும் அவர் தட்டிக்கேட்டு அங்கிருந்து திரும்பி மாற்றுப்
பாதையில் செல்லுமாறு கூறினார். இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 3 இளைஞர்கள் மனோவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதுடன் அவரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்து, செல்லிடப்பேசியை பிடுங்கி உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக மனோ அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...