ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:16 am

DIN

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் தலைமைச் செயலாளராக இருந்த மனோஜ் பரிதா புதுதில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தில்லி பொதுப்பணித் துறை செயலாளராக இருந்து வந்த அஸ்வனி குமாரை புதிய தலைமைச் செயலாளராக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது.  இந்நிலையில், புதுவை தலைமைச் செயலகத்தில் அஸ்வனி குமார் புதன்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு  கந்தவேலு, பார்த்திபன், சுந்தரவடிவேலு உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அஸ்வனி குமார், அங்கு ஆளுநர் கிரண் பேடியை சந்தித்துப் பேசினார். அங்கிருந்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த அவர், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
அவருக்கு தனது செயலாளர்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அஸ்வனி குமார் முதல் முறையாக பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.