பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது
புதுவையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டார்.


புதுவையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அன்பழகன். இவரது மனைவி ஜெயராணி (34) செவ்வாய்க்கிழமை தன் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.
அரியாங்குப்பம் சந்திப்பு அங்காளம்மன் கோயில் தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் சைக்கிளில் வந்த 16 வயது சிறுவன் ஜெயராணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளான்.
ஜெயராணி சங்கிலியை பிடித்துக்கெண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் ஜெயராணியின் முதுகில் ஓங்கி அடித்துள்ளான். ஜெயராணியின் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.
சிறுவனை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அச்சிறுவன் அரசுப் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. தந்தையை இழந்த சிறுவன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளான். சிறுவனை போலீஸார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...