மண்டல அறிவியல் நாடகப் போட்டி: நாளை தொடக்கம்

புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், மண்டல அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்குகின்றன.
Updated on
1 min read

புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், மண்டல அளவிலான அறிவியல் நாடகப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்குகின்றன.
இதுகுறித்து அறிவியல் நாடகப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும், முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வருமான தனசெல்வன் நேரு வெளியிட்ட  செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் மண்டல அளவிலான அறிவியல் நாடகப் போட்டி முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து, 16-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதி மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான நாடகப் போட்டி நடக்கிறது.  போட்டியில் தூய்மை இந்தியா, நதிகளின் தூய்மை, டிஜிட்டல் இந்தியா மற்றும் பசுமை இந்தியா என்ற தலைப்புகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அறிவியல் நாடகங்கள் இடம் பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com