ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வன்கொடுமை தடுப்பு  சட்ட விவகாரம்: ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில், அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த

Updated On :9 ஏப்ரல் 2018, 3:58 am

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில், அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் 50 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் திருப்பதி செல்லவிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இயக்கத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சுவாமிநாதன்,  விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வம்,  ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்,  இந்திய இளைஞர் முன்னணி,  சட்டப் பஞ்சாயத்து இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,  மக்கள் நல்வாழ்வு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை ஒதியஞ்சாலை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.