ஜிப்மர் மருத்துவமனையில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணு பட் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டிலுள்ள இதர மருத்துவக் கல்லூரிகளுடன் கல்வித் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, ஜிப்மரில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. ஜிப்மரில் பயில முடியாத மாணவர்களுக்கு இது பயன் தரும். அதேநேரம், உயர்தரமான, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களும் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படும்.
தொலை மருத்துவக் கல்வி, அகன்ற இழைக்கற்றை இணையதள வசதி, தேசிய தகவல் மையம், புதுவை கிளை மூலம் தேசிய அறிவுசார் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஜிப்மரில் உள்ளது. இது தென்னிந்தியக் கல்வி மண்டல வள மையமாகத் திகழ்கிறது.
தேசிய மருத்துவக் கல்லூரிகளின் இணையதள சேவைத் திட்டத்தின் ஒரு அங்கமாக மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வசதிகள் 2015-ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!

உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

