விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெண் காவலர்களுக்கு பரிசளிப்பு

பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புதுவை ஆளுநர்

Updated On :9 ஏப்ரல் 2018, 3:59 am

பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புதுவை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
புதுவை பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்.1-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது.  இந்தப் போட்டிகள் புதுச்சேரி கோரிமேடு காவல் பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
காவல் துறை,  ஊரகக் காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  100 மீ.,  200 மீ.,  400 மீ., ஓட்டம்,  நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல்,  கோகோ,  வாலிபால்,  கபடி,  எறிப்பந்து,  குண்டு எறிதல்,  கயிறு இழுத்தல் உள்பட 12 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.  ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி பரிசுகளை வழங்கினார்.
தனி நபர் சாம்பியன் பட்டம் வென்ற 27 பேருக்கும், குழு சாம்பியன் பட்டம் வென்ற 4 அணிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.  காட்டேரிகுப்பம்  காவல் நிலைய காவலர் கல்பனா 4 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். புதுவை காவல் துறைத் தலைவர் சுனில்குமார் கெளதம்,  டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன்,  கடலோரக் காவல் படை டி.ஐ.ஜி. தியாகி,  புதுவை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு ஆணையர் பிரியா, பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக புகார் அளிக்கும் அமைப்பின் மாவட்டக் குழுத் தலைவி வித்யா ராம்குமார், அனைத்துக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.