அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
புதுதில்லிக்கு சென்ற புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து புதுவை அரசியல் நிலவரம், காங்கிரஸ் மாநில நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து, கட்சிப் பதவி வழங்குவதில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், வரும் 29-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும்படியும் நமச்சிவாயத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, புதுவை அரசியல் நிலவரம் குறித்துப் பேசுகையில், முதல்வர் நாராயணசாமிக்கு எதிரான கருத்துகளையே, ராகுலிடம் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை எதிர்கொள்வதற்காக முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கத்துடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது
அசோக் விஹாரில் 5 ஸ்கூட்டா்களுக்கு தீ வைத்த இளைஞா் உள்பட 3 சிறாா்கள் கைது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து
போலி சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெண்ணிடம் மோசடி: ராஜஸ்தான் நபா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
