மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

உலக தாய்ப்பால் வார விழா பேரணி

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:57 am IST

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
 பேரணியில் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 புதுவை மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் எஸ். யஸ்வந்தையா கொடியசைத்து விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தார்.
 இந்தப் பேரணியில் பங்கேற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவனர் தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ். வி. சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன், துணை இயக்குநர் காக்னே, புல முதன்மையர் கார்த்திக்கேயன், மருத்துவக் கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் கிரிஜா ஆகியோர் பேசினர்.
 கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மதகடிப்பட்டு ரவுண்டாவில் நிறைவடைந்தது.
 அங்கு, பொதுமக்கள் மத்தியில் குழந்தைகள் நலத் தறைத் தலைவர் அருள்குமரன், பேராசிரியர் சிங்காரவேலு, தாய்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பின் நடுவண் ஒருங்கினைப்பாளர் தமிழ்நாடு கிளையைச் சேர்ந்த சாம்பசிவம் ஆகியோர் தாய்பாலின் மகத்துவம் குறித்தும், இந்த ஆண்டுக்கான மையக் கருத்து பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.
 பேரணியில் குழந்தைகள் நலத் துறை இணை மற்றும் உதவிப் பேரசிரியர், மருத்துவ முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.