பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

பாரதிதாசன் அறக்கட்டளை இரங்கல்

திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து பாரதிதாசன் அறக்கட்டளை நிர்வாகிகளான  பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன்,  பேரன்கள் கவிஞர் கோ.பாரதி,  கோ.செல்வம் ஆகியோர் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: 
 1942-ஆம் ஆண்டில் தான் நடத்தி வந்த மாணவர் மன்றத்துக்காக பாரதிதாசனிடம் வாழ்த்து கவிதை பெற்றார்.  அதில் இருந்து பாரதிதாசனின் அன்பை பெற்ற கருணாநிதி,  பாரதிதாசனின் கவிதைகளை எல்லா இடத்திலும் எடுத்துச் சொல்லி பரப்பினார். 
 1991-ம் ஆண்டு பாரதிதாசனின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கினார்.  தொடர்ந்து பல  அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கி சிறப்பித்தார்.  இளமை காலம் முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னர் மன்னனுடனும் கருணாநிதி நட்பு பாராட்டினார்.   மன்னர் மன்னன் வைத்த தமிழர்கள் தொடர்பான கோரிக்கைகளை கருணாநிதி பாராட்டினார்.  மன்னர் மன்னனுக்குத் திரு.வி.க. விருது அளித்து பாராட்டினார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு இரும்பு அரண் தமிழ் வளர்த்த தாயுள்ளம்.  சமூக நீதி மகளிர் மேம்பாட்டு உயர் வானம்.  ஆளுமையின் இமயம்.  கலைஞரின் இழப்பை எண்ணி கண்ணீர் உருக்குகிறோம்.  கட்சி பேதமற்று போற்ற வேண்டிய மாபெரும் தலைவரின் புகழ் ஓங்குக எனத் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.