காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆற்றில் மணல் அள்ளிய தொழிலாளி மீது வழக்கு

புதுச்சேரி அருகே தென்பெண்ணை ஆற்றில், மணல் அள்ளிய மாட்டு வண்டித் தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:22 am

தினமணி

புதுச்சேரி அருகே தென்பெண்ணை ஆற்றில், மணல் அள்ளிய மாட்டு வண்டித் தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 புதுச்சேரியை அடுத்த பாகூர் அருகே சோரியாங்குப்பம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இருப்பினும் இங்கு டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. அவ்வப்போது வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது, வண்டிகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாகூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் திருடி கடத்தப்படுகிறா என்பதை கண்காணிக்க சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது, சோரியாங்குப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்த சம்பத் (49) என்பவர் மாட்டு வண்டி மூலம் ஆற்றில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தார்.
 இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அவரை பாகூர் காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.