பல்கலை.கால்பந்துப் போட்டி: சாரதா கங்காதரன் கல்லூரி சாம்பியன்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் கால்பந்துப் போட்டியில் கங்காதரன் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Updated on
1 min read

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் கால்பந்துப் போட்டியில் கங்காதரன் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
 இப்போட்டி புதுவை பல்கலை. மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 23 கல்லூரி அணிகள் கலந்துகொண்டன. போட்டியை புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநர் சுல்தான் தொடக்கிவைத்தார்.
 இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டன. முதல் இடத்தை சாரதா கங்காதரன் கல்லூரியும், இரண்டாம் இடத்தை தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை மகாத்மா காந்தி கலைக் கல்லூரியும், நான்காம் இடத்தை ஆச்சாரிய கலை, அறிவியல் கல்லூரியும் பெற்றன.
 வெற்றி பெற்ற அணிகளுக்கு பல்கலைக்கழக நிதி அதிகாரி மாலபிகா தேவ், பல்கலை. துணைப் பதிவாளர் முரளிதாசன் ஆகியோர் சான்றிதழ், பதக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கி பாராட்டினர்.
 விழாவில் உதவி இயக்குநர் சிவராமன், கல்லூரி உடல்கல்வி இயக்குநர்கள் சந்திரசேகர், போதியராஜ், குமரேசன், பாலஜானகிராமன், திவ்யா, முனைவர் மதியழகன், குமரவேல், முனைவர் பிரகாஷ், காரைக்கால் மைய முனைவர் செந்தில் கலந்துகொண்டனர்.
 போட்டியை புதுவை மாநில கால்பந்து பயிற்சியாளர்கள் நத்தேவ் தலைமையிலான நடுவர்கள் நடத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடல்கல்வித் துறை உதவி இயக்குநர் சந்திரசேகரன் செய்திருந்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com