

பிரதமர் மோடி வருகையையொட்டி, புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச நகரமான ஆரோவில் மாத்ரி மந்திர் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25}ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். இதையொட்டி, திருக்கனூர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார், திருக்கனூர் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருக்கனூர், கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளுக்குச் சென்று உரிமம் மற்றும் வெடிமருந்து கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும், விதிகளை மீறி வெடி மருந்துகளை இருப்பு வைக்கக்கூடாது. அறிமுகம் உள்ள நபர்களுக்கு மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.
பட்டாசு வாங்குபவர்களிடம் பெயர் மற்றும் ஆதார் அட்டை எண் போன்ற விவரங்களை பெற வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திக்க வேண்டும்.
பட்டாசு கிடங்கை திறந்து வைக்கக் கூடாது எனவும் போலீஸார் அறிவுறுத்தினர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வரதப்பன், தலைமைக் காவலர் காத்தவராயன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
மேலும், திருக்கனூர், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளிலும் காவலர்கள் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.