ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்க நகை, ரூ.4 லட்சம் ரொக்கம்,

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:52 am

தினமணி

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்க நகை, ரூ.4 லட்சம் ரொக்கம், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கிருமாம்பாக்கம்-பிள்ளையார்குப்பம் சாலையில் வசிப்பவர் ராஜாராமன் (65). எழுதுபொருள்கள் கடை நடத்தி வருகிறார். இவர், திருவாரூரில் உள்ள தனது மகளைப் பார்க்க கடந்த 17-ஆம் தனது மனைவியுடன் திருவாரூர் சென்றார்.
 இந்த நிலையில், கிருமாம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை காலை திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவை திறந்து சென்ற அவர், பின்பக்கக் கதவை திறக்க முற்பட்ட போது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் பார்த்தபோது படுக்கை அறை, பூஜை அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 110 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
 இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
 காவல் கண்காணிப்பாளர் ரஹீம், கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் தன்வந்திரி மற்றும் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
 மேலும், விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது.
 மேலும், வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகைகள் தப்பியதாகக் கூறப்படுகிறது.
 இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருட்டில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.