தாய்மொழிக்கு எதிரான பெயர்களை வைத்தால் சொந்த அடையாளம் தொலைந்துவிடும்: கவிஞர் பாரதி
தாய்மொழிக்கு எதிரான பெயர்களை வைத்தால் சொந்த அடையாளம் தொலைந்துவிடும் என்று கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார்.


தாய்மொழிக்கு எதிரான பெயர்களை வைத்தால் சொந்த அடையாளம் தொலைந்துவிடும் என்று கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார்.
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதம்தோறும் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான விழா பாரதிதாசன் அரசு அருங்காட்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
"வாணிதாசனாரும், பாவேந்தரும்' என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் பாரதி பேசியதாவது:
தாய்மொழியான தமிழை வளர்க்க பாடுபட்ட பாரதிதாசனாரின் படைப்புத் திறனையும் துணிவையும் கண்டு வாணிதாசன், சுந்தர.சண்முகனார் உள்ளிட்டோர் அவருடன் நெருக்கமாக பழகினர். புதுச்சேரிக்கு வந்க குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தாய் மொழியான தமிழிலேயே பேச வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருப்பது பாராட்டுக்குரியது. அவரின் கருத்து உண்மையாக்கப்பட வேண்டும். தமிழ் குழந்தைகள் ஷ, ஸ, ஜ என்ற எழுத்துக்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தில் வரும்படி யாரோ சொல்வதை கேட்டு ஒரு தலைமுறைக்கே பெயர் வைத்துவிட்டனர். தாய் மொழிக்கு எதிரான பெயர்களை வைத்தால் நம் அடையாளம் தொலைந்துவிடும் என்றார் கவிஞர் பாரதி.
அவளோர் மருத்துவச்சி என்னும் பாரதிதாசனின் கவிதை வரியை தலைப்பாகக் கொண்டு 36 கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், வேல்முருகன், மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன், முனைவர் செங்கமலத்தாயார் உள்பட தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...