புதுச்சேரி அருகே தந்தை, மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மாநிலம், மதகடிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் ஆனந்த் (50). மதகடிப்பட்டு-நெட்டப்பாக்கம் சாலையில் ஹோட்டல் நடத்தி வந்தார்.
இவரது மனைவி பவானி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களுக்கு பவித்ரா (22), ஜெயலட்சுமி (20) என்ற மகள்களும், செüந்தர்ராஜன் (18) என்ற மகனும் உள்ளனர்.
பவித்ராவுக்கு திருமணமாகி, கணவருடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார்.
ஆனந்த்துக்கு மதுப் பழக்கம் இருந்தாகக் கூறப்படுகிறது. மதுப் பழக்கத்தால் அவர் ஹோட்டலை சரிவர நடத்தவில்லையாம். இதனால் ஜெயலட்சுமி, செüந்தர்ராஜன் ஆகியோர் பொறுப்புகளை ஏற்று ஹோட்டலை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஆனந்துக்கு மதுப் பழக்கம் அதிகரித்து அவர் மகன் சௌந்தர்ராஜனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், சௌந்தர்ராஜன் வட்டிக்குக் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த ஆனந்த் செவ்வாய்க்கிழமை மகனிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.
வழக்கம்போல ஏற்படும் தகராறு என நினைத்து ஜெயலட்சுமி இருவரையும் விலக்கிவிட்டு, ஹோட்டலில் உள்ள ஓர் அறையில் படுத்துத் தூங்கிவிட்டார்.
மகனை அடித்த ஆனந்த் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, மனவேதனையடைந்த செüந்தர்ராஜன் ஹோட்டலில் உள்ள மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் வீடு திரும்பிய ஆனந்த், தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அவரை மீட்கவும் முயன்றார். ஆனால், மகன் இறந்ததை அறிந்த ஆனந்த் வேதனையில் அங்குள்ள மற்றொரு அறையில் தூக்கிட்டுக் கொண்டாராம்.
புதன்கிழமை அதிகாலை வழக்கம்போல எழுந்த ஜெயலட்சுமி தந்தையும், தம்பியும் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு அருகேயுள்ள திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் உதவி ஆய்வார் பிரியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








