இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுச்சேரி நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை 

புதுச்சேரியில் 3 நகைக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:59 am

தினமணி

புதுச்சேரியில் 3 நகைக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
 புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.
 இந்த நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, அதே வீதியில் உள்ள 3 நகைக் கடைகளுக்கு புதன்கிழமை காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 35 பேர், 3 குழுக்களாக பிரிந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளின் கதவுகள் மூடப்பட்டன. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காலை தொடங்கிய சோதனை மாலை வரை தொடர்ந்தது. பின்னர், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். என்ன ஆவணங்களை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்த விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.