தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில காவல்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு புதுச்சேரி நேரு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் புதுவை மட்டுமன்றி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் சிறுசேமிப்பாக பணம் செலுத்தி வந்துள்ளனர். கோடிக்கணக்கில் பணம் வசூலான சிறுசேமிப்பு பணம் முதிர்வடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம், மக்களிடம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணத்தை மீட்டுத் தரக் கோரி மாநில தலைமை காவல் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவர்களை பெரியகடை போலீஸார் தடுத்து நிறுத்திய நிலையில், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
