உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!

சீமான் உடனான முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் சந்திப்பு குறித்து சேரன் விமர்சனம்...

TN CM C joseph vijay meeting  Seeman

முதல்வர் சி. ஜோசப் விஜய்யை வாழ்த்திய சீமான் - எக்ஸ்

Published On :11 மே 2026, 9:54 pm IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று சந்தித்தது குறித்து நடிகரும் இயக்குநருமான சேரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சேரன் பதிவிட்டுள்ளதாவது:

''அவர் வந்ததும், நீங்கள் அரவணைத்ததும் இன்று பண்பாகவும் மாண்பாகவும் ஆகலாம்.. ஆனால் தேர்தல் களத்தில் "மற்றும் பலர்" என உச்சரித்த போது ரத்தம் கொதித்ததும் நாதக தம்பிகளின் 15 வருட உழைப்பை அதில் உள்ள நேர்மையை துளிகூட நினைக்காமல் தம்பி விஜய்

புறந்தள்ளியபோது ஏற்பட்ட வேதனைக்கு ஏது மருந்து அண்ணனே.

எது என்னவாக இருந்தாலும் நீங்கள் பதினைந்து வருடம் மக்களிடம் கத்தி கத்தி விதைத்த மாற்றம் இனி நடந்தால் சந்தோசம். உனது எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் இந்த முதல்வர் செவிசாய்த்து நடத்திக்காட்டட்டும்.

நீ தான சொல்வ நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்னு... அது இந்த தம்பியாக இருந்துவிட்டு போகட்டும் மகிழ்ச்சியே'' என சேரன் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக நேற்று (மே 10) பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இன்று (மே 11) அரசியல் மூத்த தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து அண்னா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார்.

பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சீமான் இல்லத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றார்.

அப்போது வீட்டு வாசலுக்கே வந்து விஜய்யை சீமான் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பழக்கூடையை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

Summary

Director cheran about Seeman TN CM C joseph vijay meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.